திருச்சிராப்பள்ளி SIT தொழில் நுட்பக் கல்லூரியில் (14.3.25) “சோழர்களின் வியக்க வைக்கும் அறிவியல் புதையல்” என்ற தலைப்பில் பொறியியல் வல்லுநர் பேராசிரியர் சண்முகம் செல்வகுமார் அவர்கள் தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் குறித்து இதுவரை யாரும் ஆய்வு செய்யாத வெளியிடாத அறிவியல் தரவுகளைத் திரட்டிக் கருத்துக்களை முன்வைத்தார். பெரிய கோயில் குறித்து இதுவரை சொல்லப்பட்டு, கற்பிக்கப்பட்டு வந்த பல தகவல்களை அறிவியல் பூர்வமான முறையில் மறுத்து தனது நீண்ட கால ஆய்வின் வழியாகப் புதிய வரலாற்றுப் பார்வையில் மாணவர்கள் வியக்கும் வண்ணம் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இதில் திருச்சிராப்பள்ளி கேர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 43 பேர் கலந்து கொண்டனர்.