தேசிய நூலக வாரவிழா : இன்றைய இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது, புத்தக வாசிப்பே ! கணினித் தேடலே ! – பட்டிமன்றம்

கேர் பொறியியல் கல்லூரியில் தேசிய நூலக வாரவிழாவின் ஒரு பகுதியாக சிறப்பு பட்டிமன்றம் 17.11.2025 அன்று 3.30 மணி அளவில் கல்லூரி அரங்கில்இன்றைய இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது, புத்தக வாசிப்பே ! கணினித் தேடலே ! என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தப்போட்டியில்  சுமார் 70 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.  இந்த பட்டிமன்றத்தின் நடுவராக  முனைவர். செ.மணிகண்டன், மொழி மற்றும் அறிவியல் துறை/ஆசிரியர்/ கேர் பொறியியல் கல்லூரி, திருச்சி-9. பங்கேற்று  சிறப்பித்தார்.

இன்றைய அறிவியல் மற்றும் கணினி வளர்ச்சியில் புத்தகங்கள் கணினியுடன் போட்டிப்போட்டு தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. என்னதான் கணினியிடமிருந்து நாம் கற்றுக்கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அது இன்றைய இளைய தலைமுறையினரின் கற்றல்திறனில் தேக்கநிலையையே உண்டாக்கியிருக்கிறது. நினைவற்றல், அறிவுத்திரட்டல் ஆகியவற்றை வழங்குவதில் புத்தங்களே முகவரியாகத் திகழ்கின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவே இன்றைய இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் புத்தங்களே பெரும்பங்கு வகிக்கிறது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஜி.வெங்கடேசன், துறைத் தலைவர் /அறிவியல் மற்றும் மனிதத்துறை  / கேர் பொறியியல் கல்லூரி, திருச்சி – 9  கலந்து கொண்டு  வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றுதழும், கேடயமும் பரிசாக வழங்கினார்.

Comments are closed.